
துப்பாக்கி மீண்டும் ரிலீஸ்
ஜூன் 07, 2024
Advertisement
சமீபத்தில் விஜய் நடித்த "கில்லி" படம் ரீ ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. 30 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படங்களை மீண்டும் வெளியிட பலரும் முயற்சித்து வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறது "துப்பாக்கி". இந்த படத்தை வருகிற 21ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். விஜய்யுடன் காஜல் அகர்வால், சத்யன், வித்யூத் ஜமால், ஜெயராம் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement












வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!