
மீண்டும் வெளியாகிறது திருவிளையாடல்
சிவாஜியின் சினிமா சரித்திரத்தில் ஒரு மைல் கல் சினிமா "திருவிளையாடல்". சிவபெருமானின் புராண கதைகளை தொகுத்து அதன் மூலம் நீதி சொன்ன படம். தமிழில் வெளிவந்த புராண படங்களிலேயே இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் படம்.
ஏ.பி.நாகராஜன் இயக்கில் இந்த படத்தில் சிவாஜியுடன் சாவித்ரி, கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ்.பாலய்யா, முத்துராமன், நாகேஷ், டி.ஆர்.மகாலிங்கம், ஏ.பி.நாகராஜன், சாரங்கபாணி உள்ளிட்ட அன்றைக்கிருந்த பிரபலங்கள் நடித்தார்கள். கே.வி.மகாதேசன் இசை அமைத்த பாடல்கள் இப்போதும் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. 1965ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றிக்கொடி நாட்டியது.
இந்த படத்தை 2012ம் ஆண்டு மறு வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தின் நெகட்டிவ் உரிமம் யாரிடம் உள்ளது என்று பலர் மாறி மாறி நீதிமன்றம் சென்றதால் மறுவெளியீடு தள்ளிப்போனது, ஒரு வழியாக பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு படம் வெளியானது. என்றாலும் படத்தின் தொழில்நுட்பத் தரம் பாராட்டும்படியாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனால் ரீ ரிலீசில் "கர்ணன்" படம் பெரிய வெற்றியை திருவிளையாடல் பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது ஸ்ரீபால விநாயகா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் லண்டன் மற்றும் ஜெமர்னிக்கு படத்தை கொண்டு சென்று அங்குள்ள தொழில்நுட்ப வல்லுனர்களை பயன்படுத்தி படத்தை மேலும் மெருகூட்டி உள்ளது. இந்த படம் நாளை (அக்.,1) வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் அறிமுக நிகழ்வு நாளை சென்னை காசினோ தியேட்டரில் சிவாஜியின் 98வது பிறந்தாளை முன்னிட்டு நடைபெற உள்ளது.
திருவிளையாடல் பட தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகனான ஏ.என். பரமசிவம், நடிகரும் படத் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர் மகேந்திரன் , நடிகர் இளவரசு, நடிகை வடிவுக்கரசி, நடிகரும் இயக்குனருமான அண்ணாதுரை கண்ணதாசன், கதாசிரியரும் இயக்குனருமான பூபதி ராஜா , முனைவர் மருது மோகன் ஆகியோர் இந்த விழாவிலே கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!