
தனுஷ் எழுதி பாடிய மேகம் கருக்காதா
ஜூலை 13, 2022
Advertisement
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா , பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 18ம் தேதி படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான தாய் கிழவி பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகள் எழுதி பாடியிருந்தார். அப்பாடல் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து இரண்டாவது பாடலான மேகம் கருக்காதா எனும் பாடல் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து ப்ரோமோ விடியோவை தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த பாடலையும் தனுஷே எழுதி பாடியுள்ளார் .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!