‛தெறி ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங் : இயக்குனர் பதில்
மார் 03, 2026
Advertisement
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் "உஸ்தாத் பகத்சிங்" . கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முக்கிய வேடத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார்.
இந்த படம் தொடங்கிய காலகட்டத்தில் இது தமிழில் விஜய் நடித்து வெளியான "தெறி" படத்தின் ரீமேக் என கூறப்பட்டது. இன்னும் சிலரோ ஹிந்தி படம் ஒன்றின் ரீ-மேக் என்றார்கள். இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛இது ரீமேக் படம் இல்லை. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இதுபோன்ற சந்தேகங்கள் வரும். இந்த படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் இதற்கு கதை, வசனமும் நானே எழுதியுள்ளேன்"" என ரீ-மேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 26ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!