
தி வாரியர் பட டிரைலர் வெளியானது
ஜூலை 02, 2022
Advertisement
தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி , கிர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் தி வாரியர். ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கில் திரைக்கு வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிரடியான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்தினேனியும், வில்லனாக ஆதியும் நடித்திருக்கும் அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளும் தெறிக்கவிடும் வகையில் இருப்பதால் இந்த படம் லிங்குசாமிக்கு மீண்டும் திரையுலகில் ஒரு திருப்புமுனை கொடுக்கக்கூடிய படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!