
ஓம் இரு பாகங்களுக்கும் தொடர்பில்லை : ராஜ்குமார் பெரியசாமி
ஓம் படம் இரு பாகங்களாக உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், இந்த இரண்டு படங்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளர். அவர் கூறுகையில், கதை முதல் படத்திலேயே முடிவடைந்து விடும். இது இருமொழிப் படம் அல்ல. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் தங்கள் தாய்மொழியிலேயே நேரடியாக உருவான ஒரு படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைப் பெறுவார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்-டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…