யு டியூப் ரசிகர்களைக் கவர்ந்த த வாரியர் ஹிந்தி
நவ 30, 2022
Advertisement
லிங்குசாமி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி மற்றும் பலர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான படம் "த வாரியர்". இப்படம் இரு மொழிகளிலுமே தோல்வியைத் தழுவியது. ஆனாலும், இப்படத்தின் ஹிந்திப் பதிப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு இதன் ஹிந்தி டப்பிங் யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்கு இதுவரையிலும் 54 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது ஆச்சரியமான ஒன்று. 5 கோடிக்கும் அதிகமான முறை அப்படம் பார்வையிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் படம் தியேட்டர்களில் வெளியான போது யு-டியூப்பில் பார்த்த 5 கோடி பேர்களில் ஒரு கோடி பேராவது வந்து பார்த்திருந்தால் படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும்.
தமிழ், தெலுங்கில் படம் தியேட்டர்களில் வெளியான போது யு-டியூப்பில் பார்த்த 5 கோடி பேர்களில் ஒரு கோடி பேராவது வந்து பார்த்திருந்தால் படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!