ஆண்ட்ரியாவை அடிக்கடி வெட்கப்பட வைத்த வட்டம் குழுவினர்
ஜூலை 26, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சிறந்த பின்னணிப் பாடகி என்பதும் அதற்கு ஒரு காரணம். அவர் கதாநாயகியாக நடித்துள்ள "வட்டம்" படம் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நேற்று அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய படக்குழுவினர்களில் பலர் தாங்கள் ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் என்பதைத் தவறாமல் பேசினார்கள். அதனால், அடிக்கடி ஆண்ட்ரியா வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தார். தொடர்ந்து பலரும் அப்படிப் பேசியதில் அவரது முகத்தில் அவ்வளவு சிரிப்பு. படத்தின் மற்றொரு கதாநாயகியான அதுல்யா ரவி, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர்களும் தாங்கள் ஆண்ட்ரியாவின் ரசிகைகள் என்றார்கள்.
ஒரு மேடையில் அடுத்தடுத்துப் பேசிய ஆண், பெண் பிரபலங்கள் தாங்கள் ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் என்று பேசினால் அதை விட மகிழ்ச்சி என்ன இருக்கப் போகிறது. மஞ்சள் முகமாக மேடை ஏறிய ஆண்ட்ரியா நிகழ்ச்சி முடிந்த பின் வெட்கத்தில் சிவந்த முகமாகத்தான் இறங்கி வந்தார். படத்திற்கு "வட்டம்" எனப் பெயர் வைத்தற்குப் பதில் "வெட்கம்" எனப் பெயர் வைத்திருக்கலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!