
சிக்மா டிரைலர் ஒரு ஜாலியான பயணம்! -எஸ்.எஸ்.ராஜமவுலி புகழாரம்
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படம் "சிக்மா". சுந்தீப் கிஷனும், பரியா அப்துல்லாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இது, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஒரு ஆக்ஷன்-அட்வென்ச்சர் காமெடி படமாகும்.
இப்படத்தின் டிரைலரை இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலிக்கு படக்குழுவினர் திரையிட்டுக் காட்டினர். டிரைலரைப் பார்த்த பிறகு, அது குறித்து அவர் ஒரு கருத்துகளைத் தெரிவித்தார்.
""இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு கிடைத்த முதல் எண்ணம் என்னவென்றால், இது ஒரு ஜாலியான பயணம் என்பதே. இதில் ஏராளமான பொழுதுபோக்கு, நிறைய சாகசங்கள் மற்றும் ஜென்-ஸி தலைமுறைக்கான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. "சிக்மா" படம் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தவறவிடாதீர்கள். இதில் பல குறிப்பிடத்தக்க நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் , இந்த ஜாலியான சாகசத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க அவர்கள் அனைவரும் சிறப்பான பணியைச் செய்துள்ளனர்"" என்று ராஜமவுலி கூறியுள்ளார்.
இப்படத்தில் ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். தமன் இசையமைத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!