‛இவன் தந்திரன் 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது
ஜூலை 07, 2025
Advertisement
கடந்த 2017ம் ஆண்டில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வெளியான படம் "இவன் தந்திரன்". இந்த படம் ஓரளவுக்கு பாராட்டுகளை பெற்றது. இதையடுத்து 2024ம் ஆண்டில் இவன் தந்திரன் 2ம் பாகத்தை அறிவித்தார் கண்ணன். இதில் கதாநாயகனாக வட சென்னை சரண் நடிப்பதாக அறிவித்தனர். அதன் பின்னர் இந்த படத்தின் பணி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் இன்று இவன் தந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பை பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கினர். இந்த படப்பிடிப்பை சுஹாசினி மணிரத்னம் ஆக் ஷன், கட் சொல்லி துவங்கி வைத்தார்.
இவன் தந்திரன் 2ம் பாகத்தில் கதாநாயகனாக வட சென்னை சரண் நடிக்கிறார். கதாநாயகியாக சிந்து பிரியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ஜெகன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!