
தி பாரடைஸ் : முதல் தகவல் அறிக்கை
இந்தப் படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்களுக்கு ஏனோ "டாக்சிக்" படத்தின் ஞாபகம் வந்துவிட்டுப போனது. அதே மாதிரியான ஆக்ஷன் காட்சிகள், வன்முறைக் காட்சிகள், மேலும் "ஏ" சான்றிதழ் என ஒரு சில பொருத்தங்கள் இரண்டு படத்திற்கும் இருந்தன.
நேற்று இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் நடந்தது. படத்தைப் பார்த்த பலரது கருத்துக்கள் பாசிட்டிவ்வாக அமையவில்லை. உணர்வுபூர்மான ஒரு மையக் கதையைக் கொண்ட படமாக இருந்தாலும் உணர்வுபூர்வமான நிறைய காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை குறைவாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் படத்திற்கான முன்பதிவு சிறப்பாக இருப்பதால் முதல் நாள் வசூல் நானியின் முந்தைய படங்களை விட அதிகம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் விமர்சனங்களை மீறி இந்தப் படம் எப்படியான வசூலைப் பெறும் என்பதை வார இறுதி நாட்களே தீர்மானிக்கும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!