தி ஒடிசி : முதல் வார இறுதியில் 2500 கோடி வசூல்
ஜூலை 20, 2026
Advertisement
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான "தி ஒடிசி" கடந்த வாரம் ஜூலை 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் முன்பதிவும் எதிர்பார்த்ததைப் போலவே இருந்தது.
படம் வெளியான முதல் வார இறுதியில் இப்படம் உலக அளவில் 264 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 2546 கோடி. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இதுவரையில் வெளியான படங்களில் முதல் வார இறுதி வசூலில் முதலிடத்தில் இருந்த "தி டார்க் நைட் ரைசஸ்" படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 124 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. இந்தியாவில் 7.28 மில்லியன், இந்திய ரூபாய் மதிப்பில் 73 கோடி. இந்த வாரத்திற்குள்ளாக இந்தியாவில் 100 கோடி வசூலைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
250 மில்லியன் யுஎஸ் டாலர் தயாரிப்பில் இந்தப் படம் உருவானதாக சொல்லப்படுகிறது. அந்தத் தொகை முதல் வாரஇறுதி வசூலில் வந்துவிட்டது. படம் ஓடி முடிவதற்குள் இந்த வருடத்தில் அதிக வசூலைக் குவிக்கும் ஹாலிவுட் படங்களில் ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!