
நடிகர்கள் அணிந்துள்ள முகமூடி : மாளவிகா மோகனன்
மே 01, 2025
Advertisement
மலையாள நடிகையாக மாளவிகா மோகனன் தமிழில் ‛பேட்ட" படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பது போன்று முகமூடி அணிந்து, நல்ல பெயரை வாங்கி கொள்கிறார்கள். 5 ஆண்டுகளில் அப்படி முகமூடி அணிந்த பலரை பார்த்துள்ளேன். எந்த நேரத்தில் பெண்களை மதித்து பேசணும் என அவர்களுக்கு தெரியும். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படி மாறுவார்கள் என கண்கூடாக பார்த்துள்ளேன். ஆண், பெண் பேதம் சினிமாவில் இன்னமும் வேரூன்றி உள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை"" என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!