‛தி கோட் - 2வது போஸ்டர் வெளியீடு
ஜன 01, 2024
Advertisement
விஜய்யின் 68வது படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்திற்கு Greatest Of All Time என்பதன் சுருக்கமாக ‛தி கோட்" என பெயரிட்டுள்ளனர். பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் நேற்று வெளியான போஸ்டரில் விஜய் இரண்டு வித தோற்றங்களில் இருந்தார். இன்று(ஜன., 1) புத்தாண்டில் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டனர். அதில் ஒரு அதிவிரைவு பைக்கில் பறந்தபடி இரண்டு விஜய் துப்பாக்கியால் சுடுவது மாதிரியான போஸ்டர் இடம் பெற்றுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!