தமிழ் சினிமாவில் புதிய முயற்சி மின்மினி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
செப் 13, 2023
Advertisement
"சில்லு கருப்பட்டி", "ஏலே" போன்ற படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். கடந்த 2015ம் ஆண்டில் இவரது இயக்கத்தில் "மின்மினி" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதைகளத்தை கொண்ட படம் என்பதால், 2015-ம் ஆண்டு அந்த குழந்தைகளின் குழந்தைப்பருவம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிவிட்டார்.
தற்போது அந்த குழந்தைகள் கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் இளம் பருவத்தின் தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு மீண்டும் "மின்மினி" படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை தற்போது படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!