
கிராமத்து கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவான படம்
படம் பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறும்போது, “கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர் என்பதை பின்னணியாக வைத்து அதற்கு பின்னால் உள்ள அரசியலை இத்திரைப்படம் பேசுகிறது. அதிகாரவர்க்கம் ஒடுக்கப்பட்டவர்களை எவ்வாறு அவர்களுடைய திறமைகளை ஒடுக்கி அவர்களை தங்களுடைய மேல் நிலையை அடைய முடியாமல் தவிக்கும் போக்கை மேற்கொள்கின்றனர் என்பதை படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறேன். பரமக்குடி, மதுரை ,ராம்நாடு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட நிஜ கால்பந்து விளையாட்டு வீரர்களை கொண்டு படமாக்ப்பட்டுள்ளது” என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!