தி கோட் - விஜய் - பவதாரிணி குரலில் இரண்டாவது சிங்கிள் நாளை ரிலீஸ்
ஜூன் 21, 2024
Advertisement
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் "தி கோட்". இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை(ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சின்ன ட்ரீட் என “சின்ன சின்ன கண்கள்..” என்ற பாடல் நாளை வெளியாகப் போகிறது. இதனை நடிகர் விஜய்யும், மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியும் பாடி உள்ளனர். பவதாரிணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
இப்படத்தின் முதல் சிங்கிளான "விசில் போடு" பாடல் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்த அந்தப் பாடல் யு டியுப் தளத்தில் 59 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இரண்டாவது சிங்கிள் முதல் சிங்கிளை விட அதிகப் பார்வைகளை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!