
நாகசைதன்யாவின் தேங்க் யூ டீஸர் வெளியானது
மே 26, 2022
Advertisement
இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நடிகர் நாகசைதன்யா நடித்து முடித்துள்ள படம் "தேங்க் யூ". ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மாளவிகா நாயர் மற்றும் அவிகா கோர் இருவரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையமைத்துள்ளார். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். "தேங்க் யூ" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் ஜூலை மாதம் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது . நாகசைதன்யா தற்போது ஹிந்தியில் ஆமீர் கானுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் . அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்திலும் நாகசைதன்யா புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!