
விஜய் 66 அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செப் 26, 2021
Advertisement
நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இதை தில் ராஜூ தயாரிக்கிறார். பீஸ்ட் படம் முடிந்ததும் இப்படம் துவங்கும் என்றும், பிரபலமான நடிகர்கள் நடிக்க உள்ளனர். திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பான் இந்திய படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் இதை உருவாக்க உள்ளனர். இந்த படத்திற்காக விஜய்க்கு சுமார் ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement












வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!