
பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் தாய் கிழவி டிரைலர்
பிப் 23, 2026
Advertisement
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் "தாய் கிழவி". இப்படம் வரும் பிப்.,27ல் ரிலீசாகிறது. இதன் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டது.
டிரைலரில், பவுன்தாயாக நடித்துள்ள ராதிகாவின் சேட்டைகள், சொத்துக்காக அவரது மரணத்தை எதிர்பார்க்கும் மகன்கள் என கலகலப்பாக செல்கிறது. டிரைலரில் இடம்பெற்ற வசனங்களும், காட்சிகளும் முழுநீள காமெடி படமாகவும், சென்டிமென்ட் கலந்து இருப்பதை வெளிப்படுத்துகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்கும் விதமாக உருவாகியுள்ள டிரைலர், அதேபோல் படமும் ரசிக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்.,27ல் அதனை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!