ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் தமிழ் படம்
ஜூலை 20, 2026
Advertisement
உலகம் முழுக்கவே ஏஐ தொழில்நுட்பத்தில் முழுநீள திரைப்படங்கள் தயாராகிறது. அதோடு ஏஐ படங்களுக்கு விருது கிடையாது என ஆஸ்கர் அகாடமி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பட விழா அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தியில் தயாரான முதல் ஏஐ படம் "ஐசா", அதன் பிறகு கன்னடத்தில் உருவான "லவ் யூ" படங்களும் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் தமிழில் "அவிரா" என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படம் போட்டோ ரியலிஸ்டிக் ஏஐ தொழில்நுட்பத்தில் தயாராகிறது. 70க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். லைட் ஹவுஸ் பிலிம் கம்பெனி சார்பில் கணேஷ், ஜெகதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
படம் குறித்து பிரபாகரன் கூறுகையில், “அவிரா என்றால், பிரபஞ்சத்தின் பேரொளி என்று பொருள். புராணக்கதையை அடிப்படையாக வைத்து, அதில் கற்பனையை கலந்து, பான் இந்தியா படமாக உருவாக்கியுள்ளேன். போட்டோ ரியலிஸ்டிக் ஏஐ டெக்னாலஜி மூலம் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தியேட்டரில் பார்த்து ரசித்து மகிழும் ஃபேண்டஸி படம்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!