ஸ்வேதாவின் அக்கறையும், ரகுமானின் நன்றியும்
ஜூன் 07, 2022
Advertisement
சினிமாவில் எப்போதும் பாசப் போராட்டத்துக்கு பஞ்சமில்லை. திரையிலும், நிஜத்திலும் அடிக்கடி நடக்கும் விஷயம். ஏ.ஆர்.ரகுமான் தற்போது அதிகமான படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதுதவிர ஜூலை 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை உலக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். உலக நாடு முழுக்க தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, துபாய் எக்ஸ்போ, கேன்ஸ் பட விழா, பார்த்திபன் படம் என பம்பரமாக சுற்றி வருகிறார்.
இதனால் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகையும் அவர் குழுவில் பாடி வருபவருமான பாடகி ஸ்வேதா மோகன், "தயவு செய்து உங்கள் உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான நேரத்திற்கு தூங்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஏ.ஆர்.ரகுமான் "கண்டிப்பாக முயற்சி செய்கிறேன், என் மீது அக்கறை காட்டியதற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!