சர்பிரா டிரைலரில் தோன்றிய சூர்யா
ஜூன் 19, 2024
Advertisement
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து, வரவேற்பை பெற்ற திரைப்படம் "சூரரைப்போற்று" . கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ஹிந்தியில் "சர்பிரா" என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர் . இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுதாவே இயக்கி உள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் வருகின்ற ஜூலை 12ம் தேதி அன்று திரைக்கு வருவது முன்னிட்டு இன்று இதன் டிரைலர் யூடியூபில் வெளியானது. ஏற்கனவே இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள இந்த டிரைலரில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். அவர் எந்த மாதிரியான ரோலில் நடித்துள்ளார் என ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!