அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ
ஜன 08, 2025
Advertisement
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44 படம் "ரெட்ரோ". இதில் நாயகியாக பூஜா ஹெக்டேவும், முக்கிய வேடங்களில் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
காதல் கலந்த ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மே 1ம் தேதி அன்று உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!