
விக்ரம் குமாருடன் மீண்டும் இணையும் சூர்யா
ஜூலை 17, 2022
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற சூர்யா, தற்போது பாலா இயக்கும் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன், ஆர்.ரவிக்குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க உள்ள சூர்யா, அதையடுத்து விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. 2016ம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கிய 24 என்ற படத்தில் நடித்திருந்தார் சூர்யா. அந்த படத்தில் மூன்று வேடங்களில் ஹீரோ- வில்லன் என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 24 என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவும், விக்ரம் குமாரும் இணைய திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த படத்திலும் முதல் பாகத்தை போலவே ஹீரோ - வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் சூர்யா அடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!