ஐதராபாத்தில் சூர்யாவின் கங்குவா கடைசி கட்டப் படப்பிடிப்பு
டிச 19, 2023
Advertisement
சிவா இயக்கத்தில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் சரித்திரப் படம் "கங்குவா". இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சில வாரங்கள் நடைபெற உள்ள இந்தப் படப்பிடிப்பு கடைசி கட்ட படப்பிடிப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாம்.
சூர்யா நடித்து இந்த 2023ம் ஆண்டில் ஒரு படம் கூட வரவில்லை. கடந்த வருடத்திலிருந்தே அவர் இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 டி மற்றும் ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாக உள்ள இப்படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ள படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படமாக இருக்கிறது.
இப்படத்தை முடித்த பின் இயக்குனர் சிவா, அஜித் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி உள்ளது. அப்படம் சூர்யாவின் 43வது படமாகத் தயாராக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!