
வாடிவாசல் கால்ஷீட்டை ஞானவேலுக்கு கொடுத்த சூர்யா
மே 23, 2022
Advertisement
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து தற்போது பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மீனவர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான பிரீ புரொடக்சன்ஸ் பணிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. என்றாலும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தொடங்குவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் பாலா படத்தில் நடித்து முடித்ததும் ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே .ஞானவேல் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறாராம் சூர்யா. ஜெய் பீம் படம் வெளியானபோது சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தது. அதனால் சூர்யா- ஞானவேல் மீண்டும் இணையும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!