
வருமான வரிக்கு வட்டி விலக்கு விவகாரம் : மேல்முறையீடு செய்ய சூர்யா முடிவு
ஆக 18, 2021
Advertisement
நடிகர் சூர்யா வீட்டில் 2010ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் 2007-08, 2008-09 ஆகிய ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து, கடந்த 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதில் இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை சூர்யாவுக்கு அறிவுறுத்தியது.
இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் வருமான வரி தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. ஆனால், வருமான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டுமென வருமான வரி தீர்ப்பாயத்திலும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நேற்று (17.08.2021) விசாரனைக்கு வந்ததில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, நடிகர் சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு பற்றி சூர்யா தரப்பு சார்பில் ராஜசேகர் பாண்டியன் விளக்கமளித்துள்ளார். அதில் வரியும், வரிக்கான வட்டியும் முறையாக செலுத்தி வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். இன்றைய நாள் வரை நாங்கள் எந்த வரி பாக்கியும் வைக்கவில்லை, வழக்கானது வருமான வரிக்கான வட்டியை திரும்ப பெறுவதற்கானது மட்டுமே. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம் என விளக்கம் அளித்துள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!