தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ்
மார் 16, 2026
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் "வீர தீர சூரன்" படத்தில் விக்ரமிற்கு வில்லனாக அறிமுகமானார். தற்போது கென் கருணாஸ் இயக்கும் "யூத்", சவுந்தர்யா ரஜினி இயக்கும் "டெக்ஸ்லா", தனுஷ் நடிக்கும் "கர", ரஜினியுடன் ஜெயிலர் 2 படங்களில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “தமிழில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அமைந்தது. மலையாளத்தில் தொடர்ந்து பிசியாக நடித்ததால் அந்த வாய்ப்புகள் தவறிப்போனது. உண்மையை சொல்லப்போனால் நான் ரஜினி, கமலின் ரசிகன். ரஜினியின் "முள்ளும் மலரும்", கமலின் "சிப்பிக்குள் முத்து" படங்கள் என் லைப் டைம் பேவரிட்.
சீனியர் இயக்குனர்களிடம் பணியாற்றி நான் இப்போது 24 வயது இயக்குனர் கென்னுடன் பணியாற்றுகிறேன். அவருக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு உதவியாகவும் நடிக்கத் தீர்மானித்தேன். சினிமா பற்றி அவரது எண்ணங்கள் எல்லாமே அருமையாக இருந்தன. அவர் தமிழில் பெரிய ஸ்டாராக வருவார் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. எனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!