
அடுத்தடுத்த பிரிவுகள் : எதிர்பாராத அதிர்ச்சிகள்
ஆனால், இப்போதெல்லாம் "காதல் கிசுசுக்கள்" வருவதை விட "திருமணப் பிரிவுகள்" தான் அதிகம் வருகிறது. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த மூன்று பிரிவுகள் திரையுலகினரையும், ரசிகர்களையும் எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சமந்தா - நாகசைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோரது பிரிவு அறிவிப்புக்குப் பிறகு இப்போது இயக்குனர் பாலா - முத்துமலர் பிரிவு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய இரு ஜோடிகளும் தங்களது திருமண வாழ்க்கை பிரிவை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக ஒரே சமயத்தில் அறிவித்தார்கள். ஆனால், இயக்குனர் பாலாவின் பிரிவு பற்றிய தகவல் செய்தியாக மட்டுமே வெளிவந்தது. அவரது தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாலா தற்போது சூர்யா நாயகனாக நடிக்க உள்ள படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!