
சுப்பிரமணியபுரம் ரி-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியீடு
"சுப்பிரமணியபுரம்" என்ற பாடலுடன் நிறைய காட்சித் துண்டுகளுடன் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரின் வீடியோ தரம் மட்டும் குறையாக உள்ளது. எச்டி-யில் மட்டுமே வெளியிட்டுள்ளார்கள், 4 கே-வில் வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்த 2023ம் ஆண்டில் “பாபா, வேட்டையாடு விளையாடு, பொன்னியின் செல்வன் 1” ஆகிய படங்கள் ரிரிலீஸ் ஆகியிருந்தன. "பாபா, வேட்டையாடு விளையாட" படங்கள் குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்றன. ஆகஸ்ட் 4ம் தேதி சிறிய படங்கள் மட்டுமே வெளியாவதால் 2008ல் சிறிய படமாக வந்து பெரிய வெற்றியைப் பெற்ற "சுப்பிரமணியபுரம்" படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைலர் லிங்க்.... : https://www.youtube.com/watch?v=Ni6bUUeK4q4&feature=youtu.be





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!