
தலைவணங்குகிறேன் - அஜித்தை புகழ்ந்த ராஜமவுலி
அதற்கு பதிலளித்த அவர், ராமோஜி பிலிம் சிட்டியில் ஒருமுறை அஜித்தை சந்தித்தேன். பெரிய உணவகம் ஒன்றில் அவர் வேறு இடத்தில் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தார். நான் இங்கே இருந்தேன். அப்போது என்னை பார்த்த அஜித், சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார்.
அதன்பிறகு என்னை அழைத்து சென்று அவர் உட்கார சொன்னார். அப்போது என்னுடைய மனைவி வந்தார். அவரிடம் நான் அஜித் என்று அறிமுகம் செய்துக்கொண்டார். இந்த விஷயம் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு நல்ல உரையாடலாக இருந்தது. சமீபத்தில் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அது என்னவென்றால், ரசிகர்கள் அவரை தல தல என்று அழைப்பார்கள். தல வேண்டாம், அஜித் அல்லது ஏகே என கூப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்திற்கு உண்மையாகவே தலை வணங்குகிறேன் என்று அவர் அஜித்தை புகழ் தள்ளியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!