
அர்ஜூன் தாஸ் நடிக்கும் ஜான் டோ நவ.,13ல் ரிலீஸ்
அர்ஜூன் தாஸ் முதன்முதலாக காவல் அதிகாரியாக நடித்திருக்கும் படம் "ஜான் டோ" (John Doe). "பாகுபலி" பட நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார்.
“ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, குற்றவாளியா, காணாமல் போன குழந்தையா அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒருவரா ஆகிய கேள்விகளுக்கான பதிலைத் தேடிப் பயணிக்கும் சந்துரு என்கிற காவல் அதிகாரியின் தேடல்தான் படம்” என்கிறார் இயக்குநர்.
இந்த படம் நவம்பர் 13ம் தேதி ரிலீசாகும் என படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…