
மீண்டும் கார்த்திக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா
பிப் 02, 2024
Advertisement
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா, அதன் பிறகு ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, மருது, காஷ்மோரா என பல படங்களில் நடித்தார். இயக்குனர் அட்லீ தயாரிப்பில் 2014ம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பரில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ரெய்டு படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்தபடியாக விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமார், கார்த்தி நடிப்பில் இயக்கும் படத்தில் ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகி இருக்கிறார். காஷ்மோரா படத்திற்கு பிறகு கார்த்தியுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!