நயன்தாரா - சமந்தா இணையும் படம் ஓடிடியில் ரிலீஸ்?
அக் 01, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தில் விஜய் சேதுபதிக்கு நயன்தாரா மற்றும் சமந்தா ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கோணக் காதல் கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது.
படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…