
மகளின் புதிய செயலியை குரல் பதிவிட்டு துவங்கி வைத்த ரஜினி
இந்த செயலியின் துவக்க விழா இன்று(அக்., 25) சென்னையில் நடந்தது. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி டில்லியில் உள்ளார். அங்கிருந்தபடியே தனது குரலில் பதிவிட்டு இந்த செயலியை துவக்கி வைத்தார். ரஜினி கூறுகையில், “ஹூட் செயலியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. இனி எழுதப் படிக்க தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம். அருமையான கண்டுபிடிப்பு. டுவிட்டர், பேஸ்புக் போன்று பிரபலமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!