மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்
சூரி, மகிமா நம்பியார், சுகாஸ், பாலசரவணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛
மண்டாடி". ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ஆர்எஸ் இன்போடெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. ராமநாதபுர மாவட்டம் மீனவர்கள் பின்னணியில் அவர்களுக்கு இடையே நடக்கும் பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து இப்படம் வெளியாகி இருந்தது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆரம்பம் முதலே படத்தின் வசூல் சிறப்பாக வந்த நிலையில் இப்போது ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளது. இதன்மூலம் நடிகர் சூரி முதல்முறையாக ரூ.100 கோடி வசூல் படத்தை தந்துள்ளார். படத்திற்கு இந்தவாரமும் ஓரளவு வரவேற்பு இருப்பதால் நிச்சயம் இன்னும் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!