சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன்
ஜன 22, 2026
Advertisement
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் ‛பேட்ட" படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‛மாஸ்டர், தங்கலான்" போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது சர்தார் 2வில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபாஸ் ஜோடியாக அவர் நடித்த ‛தி ராஜா சாப்" படம் வெளியானது. இவர் அளித்த ஒரு பேட்டியில் நடிகைகள் சிலருக்கு நடிக்க தெரியவில்லை என்கிற ரீதியில் பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது, ‛‛தமிழ், தெலுங்கில் நீண்டகாலமாகவே தங்கள் வசனங்களை கற்றுக் கொள்ளக்கூட மெனக்கெடாத நடிகைகளை எனக்கு தெரியும். உதாரணத்திற்கு ஒரு காட்சியில் சோகமாகமாவோ அல்லது கோபமாகவோ நடிக்க வேண்டும் என்றால் மனதிற்குள் 1,2,3,4 அல்லது ‛ஏ, பி, சி, டி" என சொல்லிக் கொண்டு முகபாவனையை மட்டுமே வெளிப்படுத்துவார்கள். டப்பிங்கில் பேசும்போது உதட்டு அசவுகளை அதனுடன் பொருத்திக் கொள்வார்கள். இது ஏதோ ஒருமுறை மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல, வாழ்க்கை முழுக்க இதையே அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்"" என்றார்.
மேலும் அவர் லோகா படம் பற்றி பேசும்போது, ‛லோகா படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். மலையாள சினிமாவில் வசூல் சாதனை செய்தது. பொதுவாக இதுபோன்ற படங்களை பெரிய நடிகர்களை வைத்தே தயாரிப்பாளர்கள் எடுப்பார்கள். நடிகைகளை வைத்து எடுக்க அவர்கள் துணிவதில்லை. ஆனால் இந்தப்பட தயாரிப்பாளர் கல்யாணி மீது வைத்த நம்பிக்கையில் படத்தை எடுத்துள்ளார்"" என்றார்.
யார் அந்த நடிகைகள் என மாளவிகா மோகனன் நேரடியாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!