மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி
ஜூன் 23, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உயர்ந்ததற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு காரணம். இந்தக் கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் ஹிட்டாகி சிவகார்த்திகேயேனுக்கு எக்ஸ்ட்ரா மைலேஜை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.
“எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான்” ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கும் அனிருத் தான் இசை என்கிறார்கள்.
கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், "விக்ரம்" படத்தின் வெற்றியால் அனிருத்தே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவு செய்ததாம். அதற்கு கமல்ஹாசனும் சம்மதம் சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி ஏழாவது முறையாக மீண்டும் இணைகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…