மீண்டும் அஜித் படத்தில் சிம்ரன்
பிப் 19, 2025
Advertisement
விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "குட் பேட் அக்லி" என்கிற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார் . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
அவள் வருவாளா, வாலி, உன்னை கொடு என்னை தருவேன் போன்ற படங்களில் அஜித்தும் சிம்ரனும் இணைந்து நடித்தார்கள். இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!