
முடிவுக்கு வந்த பிரச்னை: சித்தார்த் மன்னிப்பை ஏற்றார் சாய்னா
இதற்கு நடிகர் சித்தார்த் பதிலளிக்கையில், சாய்னாவின் பாலினம் குறித்து அவதூறான பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய நிலையில் நடிகர் சித்தார்த், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார்.
சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, இது குறித்து கூறியிருப்பதாவது: சித்தார்த் முதலில் என்னைப் பற்றி ஏதோ கூறினார். பின்னர் மன்னிப்பு கோரினார். அவர் சொன்னது எதற்கு வைரலானது என்பது தெரியவில்லை. அன்று ட்ரெண்ட் ஆனதைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன்.
அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. சித்தார்த்துடன் நான் பேசியதில்லை. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக. என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!