
அல்லு அர்ஜுனை பாராட்டிய கார்த்தி
இந்தநிலையில் இந்தப்படத்தையும் அல்லு அர்ஜுனின் நடிப்பையும் பாராட்டியுள்ளார் நடிகர் கார்த்தி. “அல்லு அர்ஜுன். புஷ்பாவாக உங்களுடைய நடிப்பை பார்த்து அசந்து போனேன். ..நம்மை சிறைபிடிக்கும் அப்படி ஒரு நடிப்பு.. சுகுமார் சார் இந்த கதையின் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் உயர்தரத்தில் நீங்கள் படமாக்கிய விதம் அருமை” என குறிப்பிட்டுள்ளார் கார்த்தி.
பதிலுக்கு “என்னுடைய நடிப்பு மட்டுமின்றி ஒவ்வொருவருவரின் உழைப்பால் உருவான புஷ்பாவுக்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் கொடுத்த பாராட்டுக்களுக்கு நன்றி” என கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!