டிரெயின் படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன்
ஜூலை 18, 2024
Advertisement
முதல்முறையாக தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் "டிரெயின்". இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்காக கடந்த பல மாதங்களாக சென்னையில் டிரெயின் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் ஒருபுறம் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளில் ரயிலில் நிகழும் சம்பவத்தை மையமாக வைத்து ஆக் ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது. மிஷ்கினே இசையமைக்கிறார். இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாது பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் உள்ளார் ஸ்ருதிஹாசன். ஏற்கனவே பல படங்களில் பாடி உள்ளார். இப்போது டிரெயின் படத்தில் பாடியிருக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!