லீக்கான பிரபாஸ் வீடியோ : சலார் படக்குழு அதிர்ச்சி
பிப் 02, 2021
Advertisement
சாஹோ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். இதில் ராதே ஷ்யாம் படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.. ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் தாண்டி விட்டது. இந்தநிலையில் தற்போது பிரபாஸின் இன்னொரு படமான "சலார்" படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பு கோதாவரிக்கரையில் நடைபெற்றது. முதல்நாளே ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதேசமயம் சூட்டோடு சூடாக, பிரபாஸ் படப்பிடிப்பில் பங்கேற்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்று வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் கேமராவுக்கு மிக அருகில் நின்று பிரபாஸை வீடியோ எடுத்துள்ளதால், தற்போது யூனிட்டில் உள்ளவர்களிடமும் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!