
ஜெயிலர் 2 பற்றி சிவராஜ்குமார் தகவல்
சிறப்புமிக்க கதாபாத்திரங்களுடன் இயக்குநர்கள் என்னை அணுகுவது எனது அதிர்ஷ்டம். இந்த முறை ஜெயிலர் 2 படத்தில் எனக்குக் கூடுதல் காட்சிகள் உள்ளன. இயக்குநர் எனது கதாபாத்திரத்தைப் பயன்படுத்திய விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ரஜினி உடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதால் அவருடன் நேரத்தைச் செலவிடுவதை நான் மிகவும் விரும்புகிறேன் என்று சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த ஜெயிலர்-2 படத்தில் வித்யாபாலன், சூரஜ் வெஞ்சாரமூடு, மிர்னா, ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மோகன்லால், ஹிருத்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் 15 ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!