சிவராஜ்குமாரின் 131வது படம் அறிவிப்பு
ஜூலை 25, 2024
Advertisement
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். "சிவண்ணா" என்று கன்னட ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறவர். தற்போது தமிழ், தெலுங்கிலும் நடிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் நடிக்கும் 131வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில் சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.எஸ்.ரெட்டி மற்றும் சுதீர் தயாரிகின்றனர். பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சிவராஜ்குமார் தற்போது தலா ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படம், 3 கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!