
இப்போ செய்ற வேலையை சரியா செஞ்சா போதும் : செல்வராகவன்
நடிக்க போகும்போது, இயக்குனர் செல்வராகவனை மூட்டை கட்டி வைச்சுட்டு, நடிகரா மட்டுமே போனேன். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்; இன்னும் நிறைய கத்துக்கணும். "செட்"டுல, கீர்த்தியின் நடிப்பை நிறைய முறை வேடிக்கை பார்த்தேன். திறமையான நடிகை. கதை அமைஞ்சால், தனுஷுடன் இணைந்து நடிப்பேன். மீண்டும், "7 ஜி ரெயின்போ காலனி" மாதிரியான படங்களை இயக்கலாம்.
"நானே வருவேன்" படத்தின் படப்பிடிப்பு முடிஞ்சு, இறுதி கட்ட வேலை நடந்துட்டு இருக்கு. எதிர்கால திட்டம் எல்லாருக்கும் இருக்கும். சினிமாவில் பக்குவம் வரும்போது, இன்றைய நாளை தவிர பெரிய சிந்தனை எல்லாம் இருக்காது. இப்ப செய்ற வேலையை சரியாக செஞ்சா போதும்னு நினைக்கிறேன். என் படத்திலேயே "ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை" இரண்டாம் பாகங்களை எடுக்கலாம். அதுக்கான களம், நேரம் அமையணும் என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!