
சார்பட்டா வரவேற்பை தங்களுக்கு சாதகமாக்கும் ”அரண்மனை 3, எனிமி”
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் "அரண்மனை 3" படம் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும் படக்குழுவினர் மீடியாக்களுக்கு அனுப்பினர். அடுத்து ஆர்யாவும், விஷாலும் இணைந்து நடிக்கும் "எனிமி" படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
"சார்பட்டா பரம்பரை" படம் ஓடிடியில் வெளிவந்தாலும் சினிமா பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அரசியல், கட்சிகள், சாதி, கதைக்களம், நடிகர்கள் ஆகியவை குறித்து கடும் மோதலும், விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன. எல்லாவற்றிலும் ஆர்யா பெயரும் இடம் பெறுவதால், இந்த சமயம் தங்களுக்கு சாதகமான காலம் என "அரண்மனை 3, எனிமி" குழுவினர் முடிவு செய்து, தங்கள் படங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
"அரண்மனை 3, எனிமி" இரண்டு படங்களம் தியேட்டர்களில் வெளிவந்தாலும், ஓடிடியில் வெளிவந்தாலும் அதிக விலைக்கு வியாபாரம் பேசப்படும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு "சார்பட்டா பரம்பரை" வரவேற்பே காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!