
தணிக்கை செய்யப்பட்ட படத்தை எதிர்த்து யாரும் வழக்கு தொடர முடியாது : சர்கார் வழக்கில் முக்கிய தீர்ப்பு
அரசின் திட்டங்களை தவறாக சித்தரிப்பதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு துறையினர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஏற்கனவே உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் "தணிக்கை முடிந்த பிறகு தான் படம் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது " என்று தீர்பளித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!