சர்தார் 2 படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை
ஆக 01, 2023
Advertisement
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் "சர்தார்". அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் உள்ளது என அப்போதே படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள்.
கார்த்தி தற்போது நடித்து வரும் ‛ஜப்பான்" படம், நலன் இயக்கத்தில் நடிக்கும் ஒரு படம், பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் ஆகியவற்றிற்குப் பிறகு "சர்தார் 2" படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. "ஜப்பான்" மற்றும் நலன் இயக்கும் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பிரேம்குமார் இயக்க உள்ள படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கப் போகிறார்.
"சர்தார்" படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இந்நிலையில் "சர்தார் 2" படத்திற்கு இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். பிஎஸ் மித்ரன் இயக்கிய "இரும்புத் திரை, ஹீரோ" படங்களுக்குப் பிறகு மித்ரன், யுவன் கூட்டணி "சர்தார் 2" படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான "பருத்தி வீரன்" படத்திற்குப் பிறகு யுவன், கார்த்தி கூட்டணி, “பையா, பிரியாணி, நான் மகான் அல்ல, விருமன்” ஆகிய படங்களில் இணைந்தது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!